புதன், 17 ஜூன், 2009

மல்லாட்ட...

மணிலாக்கொல்லை
முன்னிரவுக் காவல்கள்
மிகவும் சுவாரஸ்யமானவை

அங்கொன்றும் இங்கொன்றுமாக
அண்டைக் கொல்லைகளிலும் சேர்த்து
கைக்கொண்ட வரை
சுட்டுத்தின்போம் செடிபிங்கி

முதலியார் கடை
வெல்லம் உபயம்
வீட்டு மளிகைக்கணக்கு

ஆசைப்பட்டு வாங்கினால்
இரண்டு ரூபாய்க்கு
பத்தே பத்து வறுகடலைகளை
கூம்புப் பொட்டலமாய் நீட்டுகிறான்
நகரத்தெருவின் தள்ளுவண்டிக்காரன்...
******
* மல்லாட்ட... மணிலாக்கொட்டையின் பேச்சு வழக்கு. புதுச்சேரி & தென்னாற்காடு மாவட்டங்களாகிய எங்கள் பகுதிகளில் வேர்க்கடலை - மணிலாக்கொட்டை என்றுதான் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேர்க்கடலை ரகம் இப்பகுதிகளில் பயிரிடப்படுவதால் இந்தப்பெயர்.

3 கருத்துகள்:

  1. ஆகா..எங்க ஊரிலேயும் (வடலூர்) இப்படிதான் சொல்லுவாங்க! நல்லாருக்குங்க கவிதை! :-)

    பதிலளிநீக்கு
  2. நன்றி சந்தனமுல்லை... வாங்க, நீங்களும் நம்ம பக்கம்தானா...

    பதிலளிநீக்கு
  3. நல்லா எழுதறிங்க. இன்னும் நெறைய எழுதுங்க

    பதிலளிநீக்கு