பல்லவி
காகிதக் கப்பல் காத்திருக்கிறேன்
மழையே வருவாயா...
காற்றே பட்டம் வானமளக்க
வரங்கள் தருவாயா...
இருபக்கம் தானே காகிதம் என்றால்
ஒருபக்கம் நானல்லவா – அதன்
மறுபக்கம் நீயல்லவா...
(காகிதக் கப்பல்…)
சரணம் – 1
வெள்ளைத் தாளாய் விரிந்திருக்கிறேன்
ஓவியம் வரைவாயா
கவிதைகள் புனைவாயா...
செய்தித் தாளாய் சுமந்து நிற்கிறேன்
தகவல்கள் படிப்பாயா
மணமகள் தேவையா...
கேள்வித் தாளாய் உன் கையில் நானடா
தேர்வுத் தாளில் பதில்நீயும் எழுதடா...
(காகிதக் கப்பல்…)
சரணம் – 2
புத்தகம் என்னை புரட்டிப் படித்து
வாசகன் ஆவாயா
வேடிக்கை பார்ப்பாயா...
கடித மடலாய் உன்னிடம் வந்தேன்
பதிலொன்று எழுதிடுவாயா
வாழ்த்தட்டை பரிசளிப்பாயா...
சான்றிதழ் உனக்கு என்றும் நானடா
அழைப்பிதழ் அச்சிட அட்சதை போடடா...
(காகிதக் கப்பல்…)
******