செவ்வாய், 14 ஏப்ரல், 2009

புனைபெயர்


மொட்டையாண்டி
நீலகண்டன்
ராணி
முல்லை என்று
தன் மக்களுக்கு
வழக்கற்றப்பெயர்களை
வைத்தவர் தாத்தா!

முதல் பேரன் என்னை
செல்வம் - என்றழைத்து
செல்லம் கொஞ்சியவரை
பாடுபொருளாக்கி
கவிதைகள் எழுதுகிறேன்
புனைபெயரில்...!
******