புதன், 21 மார்ச், 2012

பெருங்கடல்

ஒவ்வோர் உண்மையின்
மறுபக்கமும் இருக்கிறது
இன்னொரு உண்மை;
அது மறுதலிக்கப்படும்போது
வெற்றிடத்தை நிரப்புகிறது பொய்
******

ஆடு உறவு
குட்டி பகை
கள்ளக்காதல்
******

எப்போதும் சொல்லப்படுகின்றன
வாழ்த்துகள்
அவரவர் வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...
******
உரக்கக் குரலெழுப்புவதைவிட
அமைதியே அழகு
உண்மையெனில்,
நாம் எப்போதும்
சப்தத்தால் மொழிபெயர்க்கிறோம்
பொய்களை
******

ஒருதுளி
தயக்கத்தின் இழப்பு,
ஊளையிட்டு அரற்றுகிறது
பெருங்கடல்
******

தயங்கித் தள்ளியே
நிற்கிறது நிழல்
சிபாரிசுக்கு வந்தவரைப் போல
******

*நன்றி: சூரியகதிர் மார்ச் 16 - 31 இதழ்